skip to main |
skip to sidebar
சித்தார்த்துடன் நெருக்கம் பற்றி ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது, ‘சினிமா பற்றி மட்டும் கேளுங்கள். சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்கள்Õ என்று சூடாக பதில் அளித்தார். அதே பாணியில் நீது சந்திரா பாய்ந்திருக்கிறார். பாலிவுட் ஹீரோ ரன்தீப் ஹுடாவுடன் நெருங்கிப் பழகும் அவர், பல்வேறு இடங்களுக்கு அவருடன் ஒன்றாக சுற்றித்திரிகிறாராம். சமீபத்தில் நீதுவை தனது பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்தார் ரன்தீப். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதுபற்றி கேட்டபோது முகம் சிவந்த நீது, Ô‘நான் எப்போதுமே மற்றவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறேன். அதற்கு காரணம் சகஜமாக பேசுவதுதான் என எண்ணுகிறேன். இனிமேல் என் போக்கை மாற்றிக் கொள்ளப்போகிறேன். குறிப்பாக எனது சொந்த வாழ்க்கை பற்றி யார் கேட்டாலும் அதற்கு பதில் சொல்லப்போவதில்லை. சொந்த விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்றுதான் கூறுவேன். வாழ்வில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கிறது. அதை அனுபவிக்க விரும்புகிறேன். திருமணத்துக்கு இப்போது நேரமில்லைÕÕ என்றார்.
0 comments:
Post a Comment