Sunday, 6 November 2011
Wednesday, 5 October 2011
110 கோடியை அள்ளிய 'மங்காத்தா'!
அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் 50-வது படம் 'மங்காத்தா'. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். அஜித்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், அஞ்சலி, பிரேம்ஜி அமரன் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வந்த இப்படம், இந்த ஒரு மாதத்திற்குள் 80 கோடி ரூபாயினை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ் படத்திற்கு வசூலான தொகை இது. இதே படம் தெலுங்கில் 'கேம்ப்ளர்' என்ற பெயரிலும், மலையாளத்தில் இதே பெயரிலும் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதனுடைய வசூல் தொகைகளையும் சேர்த்தால் 110 கோடியை தாண்டும் எனத் தெரிகிறது.
Labels:
மங்காத்தா
ஏ.எம்.ரத்னம் அஜித்தை நடிக்க வைக்க மும்முரம்
'இந்தியன் பார்ட்-2': அஜித்தை நடிக்க வைக்க ஏ.எம்.ரத்னம் மும்முரம்!
ஷங்கரின் படைப்புகளிலேயே அதிக கவுரவத்திற்குரிய படம் 'இந்தியன்'தான். அப்படத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்திருந்தார் கமல். ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் எதிராக இந்தியன் தாத்தா போட்ட ஃபைட் அதன்பின் வேறெந்த படங்களிலும் அவ்வளவு தத்ரூபமாக வெளிப்பட்டதா என்றால், படு திமிரோடு சொல்லலாம் இல்லை என்று. க்ளைமாக்சில் முன் தலையில் முடிக் கற்றையை ஸ்டைலாக நீவியபடியே வெளிநாட்டு வீதியொன்றில் நடந்து போகும் இந்தியன் தாத்தா, சொல்லாமல் சொன்ன விஷயம்... இப்படத்தின் செகன்ட் பார்ட் சீக்கிரம் வரப்போகிறது என்பதைதான். அது சீக்கிரம் நடக்கவில்லை என்றாலும் சில வருடங்கள் கழித்து நடக்கவிருக்கிறது. ஆனால் அதில் நடிக்கிற அதிர்ஷ்டம் கமலுக்கு இல்லை என்பதுதான் சோகம். மாறாக அஜித்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது அந்த வாய்ப்பு. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் 'இந்தியன் பார்ட்-2'வாக இருக்கலாம் என்று சுடச் சுட தகவலை கசிய விடுகிறார்கள் கோடம்பாக்கத்தில். சம்பந்தப்பட்ட இடத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் செய்திகள் யாதெனில், 'இந்தியன்' படத்தை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம் என்பதால் இப்படத்தின் தொடர்ச்சியை எடுக்கிற உரிமையும் அவருக்கே உரித்தானது. அதனால் மிக எளிதாக இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் அவர் என்பதுதான். இதை ஷங்கரே எடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்பது ரத்னத்தின் விருப்பம். இது தொடர்பாக அவர் ஷங்கரிடமும் பேசி வருகிறாராம். 'ஜீன்ஸ்' படத்திலேயே முதலில் அஜித்தை நடிக்க வைக்கதான் நினைத்தார் ஷங்கர். அப்போது கைகூடவில்லை அந்த முயற்சி. போகிற போக்கை பார்த்தால் இப்போது நிறைவேறிவிடும் போலிருக்கிறது.எப்டியோ... நலிந்துபோன தயாரிப்பாளருக்கு 'தல' மூலமா நல்லகாலம் பொறந்தா சரி!
Labels:
அஜித்
கே.எஸ். ரவிக்குமார் ராணா' கைவிடப்படவில்லை
ராணா' கைவிடப்படவில்லை! - கே.எஸ். ரவிக்குமார்
(Rana not dropped, K.S Ravikumar confirms
)ரஜினி, தீபிகா படுகோன் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பூஜை போடப்பட்ட படம் 'ராணா'. பட பூஜை அன்றே ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்சினையால் படப்பிடிப்பு இன்று வரை தொடங்கப்படவில்லை. அவ்வப்போது 'ராணா' படம் கைவிடப்பட்டது என்ற தகவல் வெளிவர, அந்த தகவலை 'ராணா' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம் மறுத்து வந்தது. 'ராணா' படத்தில் குதிரை சவாரி, சண்டை காட்சிகள் என நிறைய இருப்பதால் ரஜினி அக்காட்சிகளில் பங்கேற்று நடிக்கும் அளவுக்கு இன்னும் உடல்நிலை சரியாகாததால் ரஜினியும் கே.எஸ்.ரவிக்குமாரும் உட்கார்ந்து பேசி, படத்தை கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. 'ராணா' படத்தினை கைவிட்டுவிட்டு 'முத்து', 'படையப்பா' மாதிரி விரைவில் படப்பிடிப்பு முடியக் கூடிய ஒரு கதையை தயார் செய்து இருவரும் இணைய இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. இத்தகவல் குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியதாவது, "ரஜினி முழுமையாக குணமடைந்து விட்டார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். 'ராணா' படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாலும், நிறைய சண்டை காட்சிகள் இருப்பதாலும் நாங்கள்தான் இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். ஈராஸ் நிறுவன தயாரிப்பாளர் சுனில் "ராணா படத்திற்காக காத்திருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ரஜினிக்கு இன்னும் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. டிசம்பர் மாதத்தில்தான் எப்போது படப்பிடிப்பு தொடங்குவது குறித்து முடிவு செய்ய இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். எது எப்டியோ... தலைவரு 'ராணா'ல நடிக்கணும்னு இருந்தா அத யாரும் மாத்த முடியாது!
Labels:
ராணா'
Monday, 3 October 2011
ரா ஒன் படத்துக்காக மும்பையில் ரஜினி
|
Labels:
ரஜினி
Sunday, 24 July 2011
IIFA awards : ரோபோட்டுக்கு 3 விருதுகள்
இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. ஷாருக் கான் சிறந்த நடிகராகவும், அனுஷ்கா சர்மா சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தி சினிமாவுக்காக, இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்படும் விழாதான் இஃபா எனப்படும் இந்தியா சர்வதேச திரைப்பட விழா. இதில் இந்தித் திரைப்படங்களுக்கும், இந்தி நடிகர், நடிகையருக்கும் மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு கொழும்பில் இந்த விழா நடத்தப்பட்டது. ஆனால் உலகத் தமிழரக்ளின் ஒட்டுமொத்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர், நடிகைகள் விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விழாவையே சப்பென்றாக்கி, பெரும் பிளாப் ஷோவாக்கி ராஜபக்சே அன் கோ முகத்தில் கரியைப் பூசினர்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விழா டோரண்டோவில் நடந்தது. இதில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. தபாங் படம் நிறைய விருதுகளைப் பெற்றது. சோனு சூத் சிறந்த வில்லனாக தேர்வானார். சோனாக்ஷி சின்ஹா சிறந்த புதுமுக நடிகையாக தேர்வு பெற்றார்.
சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், மை நேம் இஸ் கான் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிச் சென்றார். அப்படத்தை இயக்கிய கரண் ஜோஹர் சிறந்த இயக்குநராக தேர்வானார்.
சிறந்த நடிகை விருது அனுஷ்கா சர்மாவுக்குக் கிடைத்தது. பந்த் பாஜா பாராத் படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.
சிறந்த பின்னணிப் பாடகியாக மம்தா சர்மா விருது பெற்றார்.
ரோபோட்டுக்கு 3 விருதுகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் இயக்கி, ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்த ரோபோட் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன.
சிறந்த மேக்கப் கலைஞர் பானு, சிறந்த கலை இயக்குநர் சாபு சிரில், சிறந்த ஸ்பெஷல் எபக்ட் ஆகிய மூன்று பேருக்கும் ரோபோட் படத்துக்காக விருது கிடைத்தன.

ரோபோட்டுக்கு விருதுகள்
ஜான் ஆபிரகாமைப் பிரிந்தார் பிபாஷா?
நடிகர் ஜான் ஆப்ரஹாம் - பிபாஷாவும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இப்போது இவர்கள் காதல் முடிவுக்கு வந்துவிட்டது. பிபாஷா - ஜான் காதலர்களாக இருந்தபோதே, பாலிவுட்டின் பிற நாயகர்களான சாபிஃப் அலிகான் மற்றும் ரன்பீருடன் இணைத்துப் பேசப்பட்டார் பிபாஷா என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் கோயிங் ஸ்டெடியாக இருந்த பிபாஷா - ஜான் காதல் இப்போது பிரியக் காரணம் ஷாகித் கபூர் என்கிறார்கள். இருவரும் மிக நெருக்கமாக உள்ளதாக மீடியாவில் புகைப்படங்களுடன் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. இதைத் தொடர்ந்து பிபாஷாவிடமிருந்து ஜான் விலகிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.
Labels:
பிபாஷா
பிகினி காட்சிக்கு 25 லட்சம் கேட்டேன்?
பாடிகார்ட் படத்தில் பிகினி காட்சியே இல்லை. இதில் நான் ரூ 25 லட்சம் கூடுதலாகக் கேட்டதாக வந்திருக்கும் செய்தியைப் பார்த்து சிரிப்புத்தான் வருகிறது, என்கிறார் நடிகை த்ரிஷா. விஜய் நடித்த காவலன் படம் தெலுங்கில் பாடிகார்ட் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் நாயகியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் அதற்காக சம்பளத்தில் கூடுதலாக ரூ. 25 லட்சம் கேட்டதாகவும் தெலுங்கு திரையுலகில் செய்திகள் வெளியாகின
இப்போது இந்த செய்தியை மறுத்துள்ளார் த்ரிஷா. அவர் கூறுகையில், "நான் பிகினி உடையில் நடிக்க சம்மதித்ததாகவும் அதற்கு ரூ.25 லட்சம் சம்பளம் கேட்டதாகவும் வெளியான செய்திகள் ஆதாரமற்ற வதந்திகள். அதை படித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. மலையாளம் மற்றும் தமிழில் ஏற்கெனவே ரிலீசான இந்த படத்தை பார்த்தவர்களுக்கு அதில் கவர்ச்சி சீன்கள் இல்லை என்பது தெரியும்," என்றார்

த்ரிஷா
சொந்த விஷயத்தில் தலையிடாதீங்க
சித்தார்த்துடன் நெருக்கம் பற்றி ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது, ‘சினிமா பற்றி மட்டும் கேளுங்கள். சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்கள்Õ என்று சூடாக பதில் அளித்தார். அதே பாணியில் நீது சந்திரா பாய்ந்திருக்கிறார். பாலிவுட் ஹீரோ ரன்தீப் ஹுடாவுடன் நெருங்கிப் பழகும் அவர், பல்வேறு இடங்களுக்கு அவருடன் ஒன்றாக சுற்றித்திரிகிறாராம். சமீபத்தில் நீதுவை தனது பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்தார் ரன்தீப். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதுபற்றி கேட்டபோது முகம் சிவந்த நீது, Ô‘நான் எப்போதுமே மற்றவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறேன். அதற்கு காரணம் சகஜமாக பேசுவதுதான் என எண்ணுகிறேன். இனிமேல் என் போக்கை மாற்றிக் கொள்ளப்போகிறேன். குறிப்பாக எனது சொந்த வாழ்க்கை பற்றி யார் கேட்டாலும் அதற்கு பதில் சொல்லப்போவதில்லை. சொந்த விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்றுதான் கூறுவேன். வாழ்வில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கிறது. அதை அனுபவிக்க விரும்புகிறேன். திருமணத்துக்கு இப்போது நேரமில்லைÕÕ என்றார்.
Labels:
ஸ்ருதி ஹாசனிடம்
தமன்னாவின் காதல் தோல்வி?
தமிழில் நம்பர் ஒன் ஹீரோயின் என்று கூறப்பட்டு வந்த தமன்னாவுக்கு தமிழில் இப்போது ஒரேயொரு தமிழ்ப் படம்தான் உள்ளது. அது வேங்கை! தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் தமன்னா. 2009-ல் 5 படங்களில் அவர்தான்ஹீரோயின். 2010-ல் தமிழ், தெலுங்கில் 9 படங்கள் நடித்திருந்தார் தமன்னா. ஆனால் 2011-ல் இதுவரை அவர் நடித்து 1 படம்தான் வந்துள்ளது. இன்னும் வரவேண்டியிருப்பது தனுஷுடன் அவர் நடித்துள்ள வேங்கைதான்.
வேறு தமிழ்ப் படங்களே அவர் கைவசம் இல்லை. அமலா பால் போன்ற புதிய நடிகைகள் வரவால் இந்த நிலை என்று கூறப்பட்டாலும், உண்மையான காரணம் வேறாம். தமிழ் சினிமா ஹீரோ ஒருவருடன் அவருக்கிருந்த நெருக்கமான காதல் முறிந்து போனதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்த மனக் காயத்தை மறக்கவே தமிழ் சினிமா வாய்ப்புகளை உதறிவிட்டு, தெலுங்குப் பக்கம் ஒதுங்கிவிட்டாராம்!

தமன்னா
மம்முட்டி வீட்டில் மீண்டும் சோதனை?
சென்னை, ஜூலை 24: மலையாள நடிகர் மம்முட்டிக்குச் சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்த இருப்பதாக தெரிகிறது.
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள நடிகர் மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டு நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் இருவரது வீடுகளிலும் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை சிக்கியதாக கூறப்பட்டது.
இது குறித்து நடிகர் மம்முட்டியிடம் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.22 லட்சத்திற்கு வருமான வரித்துறையினர் கணக்கு கேட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய ஆவணங்கள் முறைப்படி சமர்ப்பிக்கப்படும் என மம்முட்டி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மம்முட்டிக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் நாளை மீண்டும் சோதன நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
Labels:
kerala star
Friday, 8 July 2011
HOT STILLS OF ANUSHKA
Tags: Anushka photos, Anushka Hot photos, Anushka Amazing Photos
Labels:
ANUSHKA
Wednesday, 6 July 2011
Saturday, 2 July 2011
Actor karthick wedding photos
கோவை: நடிகர் சிவகுமார்& லட்சுமி தம்பதியின் இளைய மகன் நடிகர் கார்த்தி. ஈரோடு மாவட்டம் பாசூர் அடுத்த குமாரசாமி கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சின்னுசாமி& ஜோதிமீனாட்சி மகள் ரஞ்சனி ஆகியோர் திருமணம் கோவை கொடிசியா வளாகத்தில் இன்று காலை 5.45 மணியில் இருந்து 6.45 மணிக்குள் நடக்கிறது. கொடிசியா அரங்கம் மற்றும் திருமண மேடை வண்ண, வண்ண பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
நடிகர் சிவகுமார் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் திருமண அரங்கு நுழைவாயிலில் நின்று வரவேற்றனர். மேடையில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் வரவேற்றனர். உறவினர்கள், நண்பர்கள் திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மேடையேறி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர்கள் ராஜேஷ், சத்யராஜ், சிபிராஜ், நடிகைகள் நக்மா, ரோஷினி, இயக்குநர்கள் மனோபாலா, கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ், ஆர்.வி. உதயகுமார், இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், ஜிவிபிரகாஷ் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி, கலால் துறை கமிஷனர் ராஜேந்திரன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியன், கோவை அரசு மருத்துவமனை முன்னாள் டீன் டாக்டர் குமரன், கே.ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம், ஆனைமலை ஏஜென்சீஸ் உரிமையாளர் எஸ்.பி. ஆறுமுகம், கீர்த்திலால் உரிமையாளர் சாந்தகுமார், ரூட்ஸ் ராமசாமி, செல்வம் ஏஜென்சீஸ் நந்தகுமார், ஜீடி நாயுடு மகன் கோபால், தமிழ்நாடு தேர்வாணையக்குழு உறுப்பினர் ரத்தினசபாபதி, ஊர்க்காவல் படை கமாண்டர் திருப்பூர் சிவக்குமார், சென்னை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, எழுத்தாளர் தமிழருவி மணியன், விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம், கொ.மு.க தலைவர் பெஸ்ட் ராமசாமி, சூலூர் எம்எல்ஏ பனப்பட்டி தினகரன், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
மாநகர போலீஸ் மதுவிலக்கு கூடுதல் எஸ்.பி.சுந்தரவடிவேல், உதவி கமிஷனர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Karthick
Subscribe to:
Posts (Atom)