அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் 50-வது படம் 'மங்காத்தா'. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். அஜித்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், அஞ்சலி, பிரேம்ஜி அமரன் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வந்த இப்படம், இந்த ஒரு மாதத்திற்குள் 80 கோடி ரூபாயினை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ் படத்திற்கு வசூலான தொகை இது. இதே படம் தெலுங்கில் 'கேம்ப்ளர்' என்ற பெயரிலும், மலையாளத்தில் இதே பெயரிலும் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதனுடைய வசூல் தொகைகளையும் சேர்த்தால் 110 கோடியை தாண்டும் எனத் தெரிகிறது.
Wednesday, 5 October 2011
ஏ.எம்.ரத்னம் அஜித்தை நடிக்க வைக்க மும்முரம்
'இந்தியன் பார்ட்-2': அஜித்தை நடிக்க வைக்க ஏ.எம்.ரத்னம் மும்முரம்!
ஷங்கரின் படைப்புகளிலேயே அதிக கவுரவத்திற்குரிய படம் 'இந்தியன்'தான். அப்படத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்திருந்தார் கமல். ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் எதிராக இந்தியன் தாத்தா போட்ட ஃபைட் அதன்பின் வேறெந்த படங்களிலும் அவ்வளவு தத்ரூபமாக வெளிப்பட்டதா என்றால், படு திமிரோடு சொல்லலாம் இல்லை என்று. க்ளைமாக்சில் முன் தலையில் முடிக் கற்றையை ஸ்டைலாக நீவியபடியே வெளிநாட்டு வீதியொன்றில் நடந்து போகும் இந்தியன் தாத்தா, சொல்லாமல் சொன்ன விஷயம்... இப்படத்தின் செகன்ட் பார்ட் சீக்கிரம் வரப்போகிறது என்பதைதான். அது சீக்கிரம் நடக்கவில்லை என்றாலும் சில வருடங்கள் கழித்து நடக்கவிருக்கிறது. ஆனால் அதில் நடிக்கிற அதிர்ஷ்டம் கமலுக்கு இல்லை என்பதுதான் சோகம். மாறாக அஜித்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது அந்த வாய்ப்பு. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் 'இந்தியன் பார்ட்-2'வாக இருக்கலாம் என்று சுடச் சுட தகவலை கசிய விடுகிறார்கள் கோடம்பாக்கத்தில். சம்பந்தப்பட்ட இடத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் செய்திகள் யாதெனில், 'இந்தியன்' படத்தை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம் என்பதால் இப்படத்தின் தொடர்ச்சியை எடுக்கிற உரிமையும் அவருக்கே உரித்தானது. அதனால் மிக எளிதாக இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் அவர் என்பதுதான். இதை ஷங்கரே எடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்பது ரத்னத்தின் விருப்பம். இது தொடர்பாக அவர் ஷங்கரிடமும் பேசி வருகிறாராம். 'ஜீன்ஸ்' படத்திலேயே முதலில் அஜித்தை நடிக்க வைக்கதான் நினைத்தார் ஷங்கர். அப்போது கைகூடவில்லை அந்த முயற்சி. போகிற போக்கை பார்த்தால் இப்போது நிறைவேறிவிடும் போலிருக்கிறது.எப்டியோ... நலிந்துபோன தயாரிப்பாளருக்கு 'தல' மூலமா நல்லகாலம் பொறந்தா சரி!
Labels:
அஜித்
கே.எஸ். ரவிக்குமார் ராணா' கைவிடப்படவில்லை
ராணா' கைவிடப்படவில்லை! - கே.எஸ். ரவிக்குமார்
(Rana not dropped, K.S Ravikumar confirms
)ரஜினி, தீபிகா படுகோன் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பூஜை போடப்பட்ட படம் 'ராணா'. பட பூஜை அன்றே ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்சினையால் படப்பிடிப்பு இன்று வரை தொடங்கப்படவில்லை. அவ்வப்போது 'ராணா' படம் கைவிடப்பட்டது என்ற தகவல் வெளிவர, அந்த தகவலை 'ராணா' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம் மறுத்து வந்தது. 'ராணா' படத்தில் குதிரை சவாரி, சண்டை காட்சிகள் என நிறைய இருப்பதால் ரஜினி அக்காட்சிகளில் பங்கேற்று நடிக்கும் அளவுக்கு இன்னும் உடல்நிலை சரியாகாததால் ரஜினியும் கே.எஸ்.ரவிக்குமாரும் உட்கார்ந்து பேசி, படத்தை கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. 'ராணா' படத்தினை கைவிட்டுவிட்டு 'முத்து', 'படையப்பா' மாதிரி விரைவில் படப்பிடிப்பு முடியக் கூடிய ஒரு கதையை தயார் செய்து இருவரும் இணைய இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. இத்தகவல் குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியதாவது, "ரஜினி முழுமையாக குணமடைந்து விட்டார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். 'ராணா' படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாலும், நிறைய சண்டை காட்சிகள் இருப்பதாலும் நாங்கள்தான் இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். ஈராஸ் நிறுவன தயாரிப்பாளர் சுனில் "ராணா படத்திற்காக காத்திருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ரஜினிக்கு இன்னும் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. டிசம்பர் மாதத்தில்தான் எப்போது படப்பிடிப்பு தொடங்குவது குறித்து முடிவு செய்ய இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். எது எப்டியோ... தலைவரு 'ராணா'ல நடிக்கணும்னு இருந்தா அத யாரும் மாத்த முடியாது!
Labels:
ராணா'
Monday, 3 October 2011
ரா ஒன் படத்துக்காக மும்பையில் ரஜினி
|
Labels:
ரஜினி
Subscribe to:
Posts (Atom)